Take a fresh look at your lifestyle.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு இலங்கை அதிபர் சந்திப்பு

தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கும் இலங்கை அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை அதிபர்  மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் சந்திப்பு இடம்பெறும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமாக மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கு கிழக்கின் காணி விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும், அதிபரின் யாழ் பயணத்தின்போது நல்லிணக்க அரசாங்கம் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.