Take a fresh look at your lifestyle.

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேச துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் நடாளமன்ற உறுப்பினர் ஜேசஃப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக குறிப்பிடத்தக்கது.