Take a fresh look at your lifestyle.

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வடமாகாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணம் முழுவதும் ரீதியில் இன்று முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள, வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இணைந்த நேர அட்டவணை அறிமுகமாகுவதில் காணப்படும் இழுபறி நிலையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா உள்ளிட்ட மாவட்டக்களுக்கான தனியார் போக்குவரத்துக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.  இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துக்கள் மட்டுமே செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள், பணியாளர்கள், பயணம் மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இதேவேளை  சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

சாரதி ஒருவர் தாக்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.