Take a fresh look at your lifestyle.

பொருளாதார நிலையம் வவுனியாவில் அமைக்கப்பட போராட்டம்

வடக்கில் மத்திய பொருளாதார நிலையம் வவுனியாவில் அமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில்அமைக்க வேண்டும் என வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனை மதவாச்சிக்கு மாற்றுவதற்கான செயற்பாடுகளில் சில அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

Vavuniya Protest (2)இன்னிலையில் வடக்கில் அமைக்கப்படவுள்ள  பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைக்கவேண்டும் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தி,  வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வவுனியா புதிய சந்தைக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார வர்த்தக மையம் தற்போது தென்பகுதிக்கு கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இது வவுனியா பகுதியில் தான் நிறுவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்.