Take a fresh look at your lifestyle.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் சர்ச்சையில்!

வவுனியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா? அமைப்பது என்பது தொடர்பாக இழுபறி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதினுக்கு ஏவலாட்களாக செயற்பட்டு வரும் தமிழரசுக்கட்சியும், ரெலோ இயக்கமும் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

ஓமந்தையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஈயம் உடைத்தெடுக்கும் தொழிற்சாலையொன்று இரகசியமாக இயங்கிவருகிறது.  அத்துடன் ஓமந்தையில் முஸ்லிம் குடியேற்றம் ஒன்று செய்யும் எண்ணம் ரிசாட்டுக்கு இருப்பதால் ரிசாட்டால் ஓமந்தை காணியானது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

vavuniya 2ரிசாட்டின் உந்துதலின் காரணமாக கிராமிய அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் கரீம் வவுனியா நகரிலிருந்து 2 கிலோமீற்றருக்குள் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பதுடன் ரிசாட்டிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மௌனமாகி விட்டார்களா என எண்ணத்தோன்றுகிறது.

தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள விவசாய பண்ணையை அழிப்பதும், தாண்டிக்குளத்தில் குடியிருப்புக்கள் அதிகமாக காணப்படுவதுடன் வெளியிடங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளால் போதைப்பொருள் பாவனை விபச்சாரம் என்பன அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கும் நிலையில் கழிவகற்றல் போக்குவரத்து நெருக்கடி போன்றவைகள் சிந்திக்காமல் ஒரு சிலரின் குறுகிய வியாபார நோக்கத்திற்காக மக்கள் பிரதிநிதிகள் துணை போவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வவுனியாவில் இந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் மன்னாரில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க போவதாக தெரிவித்ததானதும் முதலமைச்சர் அக் கோரிக்கையை உடனடியாகவே நிராகரித்ததும் ரிசாட்டக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக உடனடியாகவே முதலமைச்சருக்கு எதிராக அமைச்சர் ரிசாட்டின் கைக்கூலிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையானது ரிசாட்டின் கை இந்தவிடயத்தில் பின்புலத்தில் பலமாக செயல்ப்படுவதையே தெளிவுபடுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட விவசாயிகளின் எந்த விதமான கருத்துக்களையும் கேட்காமல் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் வவுனியாவில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான சர்ச்சையில் அவர்களின் முகமூடி கிழிக்கப்படும் என்பதே உண்மை.