Take a fresh look at your lifestyle.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்கிறது

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்றுவருவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கே.என் – 32 உருத்திரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நீவில் கிராமத்தில் அண்மைகாட்களாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக கடல் நீர் பயிர் செய்கை நிலங்களுக்குள் புகுந்து அபாயநிலை காணப்படுகின்றது என்றும் ஏற்கனவே குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் ஒரு பிரதேசமாக காணப்படுகின்ற இப்பகுதியில் பயிர் செய்கை நிலங்களும் பாதிக்கப்படும் அபாயநிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளதுடன் உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் வாகனங்கள் தினமும் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றது  இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் பொலிசார் மற்றும் அது சார்ந்த  அதிகாரிகளது ஒத்துழைப்புக்களுடன் இடம்பெற்று வருவதாகவே இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.