Take a fresh look at your lifestyle.

சிறீலங்கா அரசின் விவசாய அமைச்ச செயலாளர் பதவி விலகல்

சிறீலங்கா அரசின் விவசாய அமைச்சின் செயலாளர் பீ. விஜேரத்ன தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது பதவியிலிருந்து பதவி விலகல் செய்வதாக இதற்கு முன்னர் பல முறை கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும்  குறித்த பதவிக்கு வேறு ஒருவரை ஜனாதிபதி செயலகம் நியமிக்கும் வரை, பீ.விஜேரத்ன தொடர்ந்து கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.