Take a fresh look at your lifestyle.

தமிழ் நாட்டிலிருந்து அகதிகள் நாடு திரும்பினர்

தமிழ் நாட்டில் இருந்து 36 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளார்கள்.

ஐக்கியநாடுகளின் அகதிகள் பேரவையின் உதவி வழங்கலுடன் சென்னையில் இருந்து மிஹின் லங்கா வானூர்தி மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்.

இதில் 20 ஆண்களும், 16 பெண்களும் உள்ளடங்கியுள்ளார்கள்.

இவர்களை கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமாலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் குடியேற்றம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.