Take a fresh look at your lifestyle.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம்  புத்தூர் பகுதியில் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மோட்டார் கம்பெனி ஒன்றின் வாகனமே மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற வேளையில் கோர விபத்துக்குள்ளாகி வீதியின் அருகிலிருந்த வீட்டின் மதிலை உடைத்து சென்றுள்ளது.

இதில் பல இலட்சம் பெறுமதியியான மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.