Take a fresh look at your lifestyle.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது.

“வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ‘மணிமேகலை உணவுக்கூடம்’ திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

எம் தமிழ் மக்களிடையே கொடுக்கும் பழக்கம், கொடை அளிக்கும் பழக்கமானவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

வெளி நாட்டில் உள்ளவர்கள் நாட்டில் உள்ளவர்கள் உருப்படியாகச் செலவு செய்யும் படியாகக் கொடைகளை வழங்க வேண்டும்.

CVW Opening Nainai2வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. எம்மைச் சுற்றி தேவைகள் தாண்டவமாடுகின்றன. வறுமை வாட்டுகின்றது. இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும் என்றும் தெரிவித்த அவர், இதனால் தான் நாங்கள் உதவிப் பாலம் என்ற ஒரு கொடை அலகை உருவாக்கியுள்ளோம்.

பெரிய கொடைகளை எதிர் பாராமல் எத்துணை சிறிய கொடையாக இருந்தாலும் மக்கள் மனமுவந்து தரும் உதவிகளை அல்லல்படும் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகின்றோம்.

நாங்கள் கொடுத்த ஒரு சிறு தொகைப் பணத்தில் எவ்வாறு ஒரு வயது முதிர்ந்த அம்மையார், அதுவும் உற்றார் உறவினர்களைப் போரில் பறிகொடுத்த ஒருவர், தன் வாழ்க்கையை மறுசீரமைப்புச் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார் என்றும் வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.