Take a fresh look at your lifestyle.

பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்கிறதா?

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்ற மாணவி ஒருவரை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள மல்லாவி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்ற மாணவி ஒருவரை அதே பாடசாலையில் கல்வி கற்பித்து வருகின்ற ஆசிரியர் ஒருவர் கடந்த நான்கு மாதங்களிற்கு மேலாக அச்சுறுத்தி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்ததாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த மாணவியை அச்சுறுத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் இப்பாடசாலைமாணவி இச்சம்பவம்தொடர்பான எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியரூடாக அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக அதிபர் அவர்களால் வலயக்கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வலயக்கல்வித்திணைக்களம் குறித்த ஆசிரியரை அப்பாடாசலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்துடன் இணைத்துள்ளனர்.

துணுக்காய்  வலயக்கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது, பாதிக்கப்பட்ட குறித்த மாணவியால் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய நிலையில் விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து உடனடியாக விசாரணை பணிக்கப்பட்டிருந்தது. இதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆசிரியர் தற்காலிகமாக துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலை சங்கத்தின் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் குறித்த சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்கும் விதத்தில் பல்வேறு முயற்சி மேற்கொண்டதாகவும் பின் தங்கிய பகுதிகளில் நடக்கின்ற சிறுவர் துன்புறுத்தல்களை மூடி மறைத்து வருவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றம் சிறுவர் நன்னடத்தை திணைக்களம் இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.