Take a fresh look at your lifestyle.

மிதிவெடி அகற்றலில் தாமதம். நிதிப்பற்றாக்குறையே காரணம்

IMG_1590வடக்கு மாகாணத்தில் மிதிவெடி அகற்றலில் ஏற்பட்டுள்ள தாமத்திற்கு நிதிப்பற்றாக்குறையே காரணமாக உள்ளதென ஹலோ ட்ரஸ்ற்றின் வடக்கு மாகாணத்திற்கான செயற்பாட்டு முகாமையாளர் ரோஸ் ராப் தெரிவித்துள்ளார். மேலும்  முகமாலை பகுதியில் ஒவ்வொரு பத்து ஏக்கர் நிலத்திலும் 25 ஆயிரம் மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களின் பின்னர் வேம்படுகேணி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தமது கிராமங்களை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டிருன்தனர். இதன் போது அங்கு கண்ணிவெடியகற்றலுக்கு பொறுப்பாக இருந்த குறித்த பொறுப்பதிகாரி மக்களுடன் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாங்கள் இத்தனை வருடங்களாக இங்கு பணியாற்றி வருகின்றோம்.IMG_1588

இதுவரை மிருகங்களையும் பறவைகளையும் தான் பார்த்தோம் இன்று தான் மனிதர்களை காண்கின்றோம். இத்தனை வருடகாலம் மிதிவெடியகற்றல் தாமதமாகி வருவதற்கு இங்கு என்ன நடந்தது என்பதனை மிக விரைவில் நான் கூறுவேன். கண்ணிவெடி அகற்றலில் மிக கஷ்டமான பிரதேசமாக முகமாலை உள்ளது. நாம் இங்கு இதுவரை இருபத்தி ஐயாயிரம் மிதிவெடிகளை தோண்டி எடுத்துள்ளோம். இந்த பணியில் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

IMG_1600வடக்கில் உள்ள நூறு வீதமான கண்ணிவெடிகளில் ஐம்பது வீதமான மிதிவெடிகள் முகமாலை பிரதேசத்தில் தான் உள்ளன. இந்தளவு அதிகமான மிதிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசினால் தற்போது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமது இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்ற மக்களுடைய விருப்பத்தினை கருத்திற்கொண்டு மிதிவெடி அகற்றலுக்கு மக்கள் பிரதேசங்களுக்கே அதிகளவு முக்கியத்துவம் வழங்கி வருகின்றோம்.

IMG_1601இலங்கை அரசிடம் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மேலும் எமது பணியை விரைவுபடுத்த முடியும். மிதிவெடி அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக நிதிப்பிரச்சனையும் ஒரு காரணமாக உள்ளது. எமக்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளே எமக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. இவர்களிடம் மேலும் பணம் தருமாறு வற்புறுத்தி கேட்கமுடியாது. நிதிபற்றாக்குறை மிதிவெடி அகற்றலில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காரணம் என்றார் அவர்.