Take a fresh look at your lifestyle.

அவயங்களை இழந்தவர்கள் 18,104 பேர்

வடக்கில் போரினால் அவயங்களை இழந்த 18ஆயிரத்தி 104 பேர் காணப்படுவதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகால போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளார்கள்.

இந்நிலையில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 18 ஆயிரத்தி 104 பேர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து வருவதாக வடமாகாண சபை புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் தரவுகளின் படி 20 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிரங்களை அவதானிக்கும்போது, போரில் பாதிக்கப்பட்ட பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.