Take a fresh look at your lifestyle.

கைது செய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் விளக்க மறியலில்

கிளிநொச்சி கரடிப்போக்குச்சந்தியிலுள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விடுதி ஒன்றில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமியை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி கற்பமடைய வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை மேலும் பதினான்கு நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கிளிநொச்சி கரடிப்போக்குசந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சிறுவர் இல்லம் ஒன்றிலே தங்கியிருந்து வெளியேறிய தாய் தந்தையர் அற்ற பதினைந்து வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி கற்பம் அடையச்செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த 14ம் திகதி இளைஞர் ஒருவர் கிளிநொச்சிப்பொலிசாரால் கைது  செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து குறித்த இளைஞரை நேற்று (29-06-2016) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்றைய தினம் (29-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 13ம் திகதி வரை மேலும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.