Take a fresh look at your lifestyle.

சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி ???

IMG_1562IMG_1559சிறிலங்கா மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளிலான ஊர்வலம் ஒன்று இன்று காலை நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள மனிதவுரிமை காரியாலயத்திற்கு முன்பாக காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய ஊர்வலம், IMG_1552IMG_1558வேம்படி மகளிர் பாடசாலை வழியாக வந்து யா.பொலிஸ் நிலையத்தை அடைந்து வைத்தியசாலை வீதியை சென்றடைந்து பின்னர் யாழ்.பொது நூலத்தை சென்றடைந்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதியில் வீதி நாடகங்களும் நடைபெற்றன.

 

IMG_1545இந்த ஊர்வலத்தில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் மற்றும் மதத்தலைவர்கள்,  பாடசாலை மாணவர்கள் ஆகியோர் உட்பட அனவைரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர், யாழில் பொலிசாருக்கு எதிராகவே அதிகளவில் சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் கிடைப்பதாக தெரிவித்தார்.