Take a fresh look at your lifestyle.

பாடசாலைகளைவிட்டு இடைவிலகும் மாணவர்கள் தொகை அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகளை விட்டு மாணவர்கள் இடைவிலகும் தொகை அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலை செல்லாத அல்லது பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகும் தொகை அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் இராமநாதபுரம் ஊற்றுப்புலம் பழைய கோரக்கன்கட்டு ஜெயபுரம் இரணைமாதா நகர் சிவபுரம் பரந்தன் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத சிறுவர்கள் அதிகளவில் காணப்படுகின்றது என்றும் அத்துடன் பாடசாலைகளின் ஒழுங்கற்ற வரவு மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகும் தொகை அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது,

மேற் குறித்த பகுதிகளில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகும் தொகை மற்றும் ஒழுங்கற்ற வரவு அதிகளவில் காணப்படுவதாக வலயக்கல்வி திணைக்களத்தின் மூலம் தெரியவருகின்றது. குறிப்பாக பன்னங்கண்டி பழைய கோரக்கன்கட்டு ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் போதைப்பொருள் விற்பனை என்பவற்றுக்கும் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் இவ்வாறு கஞ்சா விற்பனை மற்றும் கசிப்பு விற்பனை என்பவற்றுடன் சிறுவர்கள் தொடர்புபட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாடசாலையை விட்டு இடைவிலகும் மற்றும் பாடசாலை செல்லாத சிறுவர்கள் ஒழுங்கற்ற வரவுகளில் காணப்படும் மாணவர்களை உரிய முறையில் பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களை சூழ்ந்து வாழும் சமுகம் முன் வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.