Take a fresh look at your lifestyle.

பிள்ளையான் தொடா்ந்தும் விளக்கமறியலில்!

தமிழ் தேசிய அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில்  விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி சந்திரமனி சிவபாதம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு  இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.