Take a fresh look at your lifestyle.

மீனவர்கள் விளக்கமறியல் காலம் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 11 பேரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது தமிழகம் புதுக்கோட்டையினை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் வழக்கு விசாரணை இன்று மூன்றாவது முறையாக ஊர்காவல் துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் விளக்கமறியல் காலத்தை யூலை 8ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவல் துறை நீதிமன்ற நீதி பதி உத்தரவிட்டுள்ளார்.