Take a fresh look at your lifestyle.

“வடக்கில் கொத்தணிக்குண்டுகள் வீசப்பட்டது”

வடக்கில் கொத்தணிக்குண்டுகள் வீசப்பட்டுள்ளதை வடமாகாண கல்வி அமைச்சர் உறுதி பட தெரிவித்துள்ளார்.

வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போரின் போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் பத்திரிகை ஒன்று ஆதாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து  தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் கூட்டத்தொடரிலும் பேசப்பட்டுள்ளது.

போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தவில்லை என இலங்கை அரசும் அதன் அமைச்சர்களும் தெரிவித்து வந்துள்ளார்கள்.

இன்னிலையில் இன்று முல்லைத்தீவு உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்து பேசிய வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப உலக நாடுகள் உதவிகளை செய்துள்ளார்கள். இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக பெருமளவு நீதியினை செலவீடுசெய்யவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த காலத்தில் போர் நடந்த காலத்தில் இவ்வாறான பரிந்துரைகள் எல்லாம் ஆயுதகொள்வனவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் பெரும்பாலான பணத்தை போருக்கு செலவிட்டார்கள் நாங்கள் இடம்பெயர்ந்து போகின்ற போது எமது வாழ் இடங்களில் கொத்துக்குண்டுகளை போட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.