Take a fresh look at your lifestyle.

வட்டக்கச்சியில் விடுதலைப்புலிகளின் நகை புதையலை தோண்டிய பொலீஸார்!

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் இன்று பொலிஸார் தோண்டுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி உள்ள பகுதியில் இந்ந தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கடந்த இரண்டு, மூன்று  வாரங்களிற்கு  முன்னர் இனம் தெரியாதவர்களினால் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி உள்ள பகுதியின் வளாகத்தில் தோண்டுதல் நடவடிக்கை மேற்கொண்டுவிட்டு விட்டுச்சென்றுள்ளார்கள்.

தகவல் அறிந்த பொலிஸார் குறித்த பகுதியில் என்ன உள்ளது என்பதனை ஆராய்வதற்காகவே இந்த தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த தேடுதல் வேட்டையில் கிளிநொச்சி பொலிஸார், குற்றத்தடவியல் பொலிஸார் மற்றும் இராமநாதபுர பொலிஸார் இணைந்து   நடத்தி  இருந்த  போதிலும்  எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

குறித்த பதுங்கு குழி வளாகத்தில் இரண்டு இடங்களில் சந்தேக நபரிகளினால் தோண்டப்பட்டு விட்டுச்செல்லப்பட்ட  இடங்களிலையே  இந்த  தோண்டுதல்  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது