Take a fresh look at your lifestyle.

வவுனியா மக்களுக்குக் காணிகள்

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த மக்களுக்கு அப்பகுதி காணிகள் வழங்கப்பட்டு சிதம்பர நகர் என்ற புதிய நகராக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாணமுதலமைச்சர் மற்றும் மத்திய மீள்குடியேற்ற அமைச்சர்உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் சிதம்பர நகர் என்ற புதிய நகரினையும் திறந்து வைத்துள்ளார்கள்.