Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சியில் பின்தங்கிய கிராமங்களில் கசிப்பு, கஞ்சா விற்பனையில் சிறுவர்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில் கசிப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குடும்பங்களின் வறுமை மற்றும் போரினால் ஏற்பட்ட பெற்றோர்கள் சொத்துக்கள் இழப்பினால்நாள்தோறும் தொழில் செய்து குடும்பத்தினை கொண்டு செல்லவேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களில் காணப்படும் சிறுவர்கள் பாடசாலையில் இருந்துஇடைவிலகி இவ்வாறான சமூக சீர்கேடுகளிலும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையிலும்ஈடுபட்டு வருகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர், இராமநாதபுரம், ஊற்றுப்புலம், பழைய கோரக்கன்கட்டு, ஜெயபுரம், இரணைமாதா நகர், பரந்தன், பன்னங்கண்டி பகுதிகளில் இருந்து பாடசாலை செல்லும் அதிகளவான சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளார்கள்.

இவ்வாறு இடைவிலகும் மாணவர்கள் கள்ளமரம்அறுத்தல், மணல் ஏற்றுதல், போதைப்பொருள் விற்பனை போற்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சிறுவர்கள்  கைநிறைய பணம் கிடைத்தவுடன் பாடசாலையினை மறந்து விடுகின்றார்கள்.

சட்டத்திற்கு புறம்பான முறைகளில் பணம் சம்பாதிக்கும் இவ்வாறன சிறுவர்களை கிளிநொச்சி பொலீஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.