Take a fresh look at your lifestyle.

குற்றச்செயல்கள் இடம்பெறும் விடுதிகள்

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் காணப்படுகின்ற விடுதிகள் பதிவுகளுக்கு உட்படுத்தப்படாத விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு தனியார் விடுதிகள் பதிவுகளுக்கு உட்படுத்தப்படாமல் இயங்கி வருகின்றன.

இவ்வாறு இயங்கி வருகின்ற விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த உரிய தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் இயங்கி வரும் பகுதிகளுக்கு உட்படுத்தப்படாத சட்டவிரோத விடுதிகள் பல இயங்கி வருகின்றன என்றும் குறிப்பாக சில விடுதிகளில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக கனகபுரம் வீதியில் இயங்கி வருகின்ற பதிவு செய்யப்படாத விடுதிகள் சிலவற்றில் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாக பின் தங்கிய கிராமங்களில் இருந்து பெண்கள் யுவதிகளை கொண்டு வந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, கரடிப்போக்குச்சந்திப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் வைத்தே அண்மையில் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவர்பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைய செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் இவ்வாறு பின் தங்கிய கிராமங்களில் இருந்து பெண்கள் யுவதிகளை கொண்டு வந்து பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, கரடிப்போக்குச்சந்திப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் வைத்தே அண்மையில் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைய செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.