Take a fresh look at your lifestyle.

சுண்டிக்குளம் பகுதியில் ஆர்.பி.ஜி எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 4 ஆர்பிஜி குண்டுகள்  குண்டு செயலிழக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருக்கு வழங்கி தகவலை அடுத்து குறித்த பகுதியில் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 4 ஆர்பிஜி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் குண்டுகள் செயலிழக்கப்படும் எனவும் குறித்த இடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பதுங்கு குழியொன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.