Take a fresh look at your lifestyle.

திருகோணமலை படுகொலை 5ஆவது நாளாக விசாரணை – சாட்சியமளித்த பெண் மயக்கம்!

திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் 1996 ஆம் ஆண்டு 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஜந்தாவது நாளாக இன்றும் அனுராதபுரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் மேலும் இரண்டு சாட்சிகள் தங்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளார்கள்.

20 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படுகொலை தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த ஒரு பெண் தனது பிள்ளைகளின் படுகொலை தொடர்பில் சாட்சி தெரிவித்துக்கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார்.

அரைமணிநேர இடைவெளியின் பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்ற வாளிகளான படையினர் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த சாட்சி விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.