Take a fresh look at your lifestyle.

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார் மனவளர்ச்சி குன்றிய பெண்

ஏ9 வீதியில் கற்குவாரி கிராமத்தில் வயோதிப தாயருடன் வசித்து வந்த மனவளர்ச்சி குறைந்த மாற்றுத்திறானளியான இளம் பெண் ஒருவர், அக்கிராமத்தில் வசித்த பெரியவர் ஒருவரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நிலையில் மாங்குளம் ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் பொது வைத்தியசாலைகளுக்கு அவசர சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது வயோதிபத் தாயரின் உதவியுடன் வசித்து வந்த மனவளர்ச்சி குறைந்த மாற்றுத்திறானளியான 36வயதுடைய பெண், அவரது தாயார் மாங்குளம் நகரப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்கள் வாங்கச் சென்ற போது, வீட்டில் தனித்திருந்துள்ளார்.  இதனை அவதானித்த, அதே கிராமத்தில் வசித்த ஒருவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இதன் பின், மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்ட அந்தப் பெண்ணை,  தாயார் மாங்குளம் ஆதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.  மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டு, சிகிச்சை வழங்கப்ட்ட நிலையில் மேலதிக அதிதீவிர சிகிச்சைகளுக்காக அவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பாக, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற மாங்குளம் பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் அவரது வயோதிப தாயரிடமும் சம்பவம் தொடர்பான தகவல்களைப் பெற்று, குற்றப்பதிவு செய்துள்ளடதுடன், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கையினை கிளிநொச்சி, வவுனியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளிடமிருந்து பெற்றுளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மாங்குளத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கும் மாங்குளம் பொலிஸார், நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சந்தேகநபர் தொடர்பான தகவல்களை அனுப்பி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக் தெரிவித்துள்ளனர்.