Take a fresh look at your lifestyle.

மாங்குளத்தில் பொருளாதார மையம் !!

வடக்கின் பொருளாதார மையத்தை மாங்குளத்தில் அமைக்கவேண்டும் கமக்கார அமைப்புக்கள் கூட்டு தீர்மானம்!

வடக்கின் பொருளாதார மையத்தினை வவுனியா தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டும் என்றும் வவுனியாவில் அமைக்கவேண்டும் என்று போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் வடக்கில் பொருளாதார நிலையத்தை முல்லைத்தீவின் மாங்குளத்தில் அமைக்கவேண்டும் என்று கமக்கார அமைப்புக்கள் கூட்டாக இணைந்து தீர்மானம் கொண்டுவந்துள்ளார்கள்.

வடக்கின் பொருளாதார மையத்தினை 5 மாவட்டங்களுக்கு ம் மத்தியில் அமைந்திருக்கும் மாங்குளத்தில் அமைக்கவேண்டும் என்று ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 31 கமக்கார அமைப்புக்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்கள் குறித்த தீர்மானம் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் போரின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டம் பல வழிகளிலும் சிதைக்கப்பட்டு வறுமைகூடிய மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது இன்னிலையில் மாவட்டத்தின் விவசாய உற்பத்தி சார்ந்து வளர்ச்சியடைய வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவே பொருளாதார மையத்தை மாங்குளத்தில் அமைப்பது சிறப்பாகும், மாங்குளத்தில் அதற்கான காணிகள் அதிகளவில் காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.