Take a fresh look at your lifestyle.

காட்டுயானைகளின் தொல்லை

முல்லைத்தீவு உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் தங்கியுள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமை காட்டுயானைகளின் தொல்லை காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் காணிகளின்றி வாழ்ந்து மற்றும் வீடுகள் இல்லாத நிலையில் காணப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் என பல்வேறுபட்டோர் துணுக்காய் உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் 50 குடும்பங்கள் 2012ம் ஆண்டு குடியேற்றப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இலலாத நிலையில் இங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து வௌவேறு இடங்களுக்கும் சென்றுள்ளன.

ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டபோதும் தற்போது 23 வரையான குடும்பங்கள் மாத்திரமே இங்கு வாழ்ந்து வருகின்றன.

சீரான போக்குவரத்து வசதிகள் இன்மை உரிய தொழில் வாய்ப்புக்கள் இன்மை.

ஊள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் தற்போது ஏற்பட்டுள்ள காட்டு யானைகளின் தொல்லை என்பவற்றின் காரணமாக இப்பகுதியில் இருந்து தாங்கள் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலை காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது காட்டுயானைகளின் தொல்லை என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுவதுடன் குறித்த பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்ட சில வீடுகள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த கிராமத்தின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன் சேதமடைந்த நிலையில் காணப்படும் வீடுகளை புனரமைத்து தருவதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.