Take a fresh look at your lifestyle.

ஆளணி பற்றாக்குறை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சித்திணைக்களத்தினூடாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக இருப்பதாக உள்ளுராட்சி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய நான்கு பிரதே சபைகளின் கீழுள்ள பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் அவற்றை உரிய முறையில் உரிய காலங்களிலும் முன்னெடுப்பதற்கு உரிய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகள் என்பன பெரும் பிரச்சனையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மூன்று பிரதேச சபைகளிலும் பத்திற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இல்லாத நிலை காணப்படுவதுடன் இதேவேளை தரம் 1 தரத்திலான தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. தரம்

3 தரத்திலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மூன்றுபேர் மாத்திரமுள்ளதால் இத்தரத்தில் உள்ளவர்கள் ஆறு மில்லியன் ரூபாவிற்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மாத்திரம் அனுமதிகளை வழங்கமுடியும் இத்தொகைக்கு மேலான எந்த வேலைத்திட்டங்களுக்கும் அனுமதிகளை வழங்கமுடியாது.

இவ்வாறு ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட வேலைகளுக்கான அனுமதிகளை வழங்கமுடியாதுள்ளது. இவ்வாறு உள்ளுராட்சி திணைக்களம் மற்றும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேசசபைகளில் தரம் 01 தரத்திலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எவரும் இல்லாத நிலை மற்றும் ஏனைய ஆளணி வளப்பற்றாக்குறைகள் என்பன அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ளது என்றும் இவ்வாறான நிலை காணப்படுகின்ற போது மக்கள் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில்லை என திணைக்களத்தின் மீது விசனம் தெரிவித்து வருகின்றனர் எனவும் உள்ளுராட்சி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.