Take a fresh look at your lifestyle.

உணவகத்திற்குத் தண்டப்பணம்

முல்லைத்தீவு, மாங்குளம், திருமுறிகண்டி, ஆகிய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த உணவகம் உட்பட மூவருக்கு எழுபத்தி ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட மாங்குளம் திருமுறிகண்டி ஆகிய பகுதிகளில் பொதுச்சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாங்குளம் பகுதியில் உள்ள உள்ளுர் அமைப்பொன்று நடத்தி வருகின்ற உணவகம் ஒன்று சுகாதார சீர் கேடான முறையில் இயங்கி வந்ததுடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வெற்று விகர் ரின்களை குவித்திருந்தமை தொடர்பாகவும் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து நாற்பத்தி ஓராயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது, இதே போன்று திருமுறிகண்டிப் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு முற்பதாயிரம் ரூபாவும் மல்லாவியில் இருந்து மாங்குளம் பகுதியில் வெதுப்பக பொருட்களை கொண்டு சென்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது விற்பனை செய்த ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாவும் தண்டப்பணமும் என குறித்த மூவருக்கும் எழுபத்தி ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காயில் இயங்கி வரும் கிராமிய நீதிமன்றத்தினூடாக கடந்த வார அமர்வில் மேற்படி தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.