Take a fresh look at your lifestyle.

சிகரெட் கேட்டு பொலீஸார் அடி

சிறீலங்கா பொலிசார் குறைந்த விலையில் சிகரெட் தருமாறு கோரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் 100 ரூபாவிற்கு 4 சிகரெட் தருமாறு கோரியே பொலிஸார் கடை உரிமையாளர் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ். பஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள தேனீர் கடை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ். பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த 2 சிங்கள பொலிஸ் உத்தியோத்தர்கள் மதுபோதையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த கடைக்குச் சென்றுள்ளனர். மது போதையில் சென்ற குறித்த இருவரும், 100 ரூபா காசினைக் கொடுத்து விட்டு 4 சிகரெட் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் 2 சிகரெட்டுகள் தான் தர முடியும் என்றும் ஒரு சிகரெட்டின் விலை 40 ரூபா என்றும் கூறியுள்ளார்.

ஆதற்கு, ஏன் 40 ரூபா, என்றும் 30 ரூபா தானே சிகரெட் என்றும் கேட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். தகராறு பெரிதாக, தம் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த இரு பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலங்காவில் ஈழத்தமிழர்கள் மீது இவ்வாறான சித்திரவதைகள் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் மன்னாரில் ஒருவர் கடத்தப்பட்டு எரிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் அதற்கு முன்னர் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் சிறீலங்கா பொலிசாரால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.