Take a fresh look at your lifestyle.

பெண்கள் சாரணிப் படை தேவை

வடமாகாணத்தில் பெண்கள் சாரணி மாணவர்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பெண்கள் சாரணிய சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று (02-07-2016) கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் முதன்மை விருந்தினரான கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் அவர்கள் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஐம்பத்தி இரண்டாயிரம் மாணவர்கள் வரையில் பெண் சாரணியத்தில் உள்ளனர்.

வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 750 மாணவர்கள் மாத்திரமே இதில் உள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள 988 மாகாணப்பாடசாலைகள் 22 தேசியப்பாடசாலைகள் உட்பட ஆயிரத்து 10 பாடசாலைகளில் தற்போது இரண்டு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் மாணவிகளும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களும் அடங்குகின்றனர்.

இதில் 750 மாணவர்கள் மாத்திரம் இருப்பது என்பது போதுமானதாக இல்லை. இதன் தொகை அதிகரிக்கப்படவேண்டும் இதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

பெண்கள் சாரணியம் 1917ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூறாவது ஆண்டை கொண்டாடவுள்ளது. இதில் கூடுதலான பெண்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும் நாங்கள் ஓர் அறிவுசார் சமுகத்தில் வாழ்கின்றோம். அதில் வாழும் நாங்கள் அறிவுள்ளவர்காள வாழ வேண்டும் அதில் முக்கிய பங்கு எங்களுக்குள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (02-07-2016) பகல் 9. 00 மணி முதல் 2. 00 மணி வரையும் நடைபெற்ற இச் சாரணிய மாநாட்டில் வடமாகாணத்தின் பாடசாலைகளைச் சேர்ந்த சாரணிய மாணவர்கள் பொறுப்பாசிரியர்கள் என்பலர் கலந்து கொண்டனர்.