Take a fresh look at your lifestyle.

முத்தம் கொடுக்க முயன்ற இளைஞன் நையப்புடைக்கப்பட்டார்!

திருகோணமலையில் யுவதிக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞன் மக்களால் நையப்புடைப்பு!

திருகோணமலையில் பட்டப்பகலில் வீதியால் சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் பொதுமக்கள் பிடித்து தாக்கிவிட்டு பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

திருகோணமலை ஏகாம்பரம் வீதி கேணியடியில் நேற்று மாலை  வீதியால்  சென்று கொண்டிருந்த  யுவதி ஒருவரை  முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞன் ஒருவர் கட்டியணைத்து முத்தம் கொடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, எதிர்பாராவிதமாக  இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த யுவதி கூச்சலிட வீதியால் சென்ற பொதுமக்கள்  இளைஞனை  மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞனைக் கைது செய்த பொலிஸார்  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்