Take a fresh look at your lifestyle.

வல்லுறவிற்குள்ளான பெண் தொடர்ந்தும் மருத்துவ மனையில்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் தனது நான்கு பிள்ளைகளுடன் தனிமையில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் குடிகார கும்பல் ஒன்றினால் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வவுனியா புளியங்குளத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் மூன்று நபர்களால் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளியங்குளம் பகுதியில் கணவன் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணே இவ்வாறு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.