Take a fresh look at your lifestyle.

வவுனியாவில் வெவ்வேறு சம்பங்களில் மூவர் பலி!

வவுனியாமாவட்டத்தில் தீக்காயங்களுக்குள்ளான யுவதி ஒருவரும்  விபத்தின் போது ஒருவரும், தூக்கில் தொங்கி ஒருவரும் என வெவ்வேறு சம்பங்களில் மூவர் உயிரிழந்துள்ளார்கள்.

வவுனியா ஆச்சிபுரம் பகுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த தர்மலிங்கம் மகேந்திரன் 55வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளது இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்ணெண்ணை அடுப்பில் தீ ஏற்பட்டு எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

25 அகவையுடைய சிவபாலன் பகீரதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற குடும்பஸ்தர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான 31 அகவையுடைய  கிருஷ்ணன் செல்வநாயகம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.