Take a fresh look at your lifestyle.

ஆயிரம் குடும்பங்களுக்கு, மீள்குடியேற எதிர்பார்ப்பு

யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் 1,040 குடும்பங்கள் மீள்குடியேற எதிர்பார்ப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் அண்மையில் படையினர் வசமிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் பிரதேசத்தில் மீள்குடியேற 1040 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நிதந்தர வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வாரம்இடம்பெற்றுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சினால் 3,265 வீடுகளை அமைக்க எதிர்பாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டிற்கு 8 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.