Take a fresh look at your lifestyle.

இராணுவத்தை வெளியேற்றக் கோரிக்கை

_DSC0019_DSC0016வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேறக்கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், மக்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் யாழ்.நகரில் இன்று கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த கையெழுத்து வேட்டை நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் பிரதான பேருந்து நிலையத்தின் அருகே நடைபெற்றது.

_DSC0021இதன் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது கையெழுத்துக்களை இட்டனர். அவ்வியக்கத்தின் அங்கத்தவர்கள் வீதியால் சென்ற மக்களுக்கு விழிப்பூட்டல் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து நாட்டில் இடம்பெற்று வருகின்ற அண்மைக்கால செயற்பாடுகள்,சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்தல்,காணமலாக்கப்பட்ட சகலரதும் தகவல்களையும் உடன் வெளியிடுதல். இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்தல் உள்ளிட்ட செயல்களை உடனடியாக முன்னெடுக்க கையெழுத்து செயற்பாட்டை முன்னெடுத்தனர்._DSC0027

இராணுவம் நிலைகொண்டிருக்கின்ற பெரும்பாலான நிலம் பொது மக்களுக்குரியது, எங்களுடைய விவசாய பண்ணைகளுக்குரியது, ஆகவே இராணுவத்தினர் இத்தகைய இடங்களில் இருந்து கொண்டு நாங்கள் இங்கு இருக்க வேண்டும் என்று கோருவதும் அதற்கு சார்பாக சிலர் கருத்துக்களை கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இராணும் வெளியேற வேண்டும் என்ற எங்களுடைய கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியிருந்தனர்.