Take a fresh look at your lifestyle.

சிறுவர் இல்லத்திலிருந்து உடலம் மீட்பு!

மட்டக்களப்பில் சிறுவர் இல்லத்தில் இருந்து சிசுவின் உடலம் மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து  சிசு ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சிறுவர் இல்ல சமையல்காரப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த சிறுவர் இல்லத்திற்கு சென்ற பெண் இறந்த நிலையில் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.

பிறந்த குழந்தையினை சிறுவர் இல்ல வாழைத்தோட்டத்தில் புதைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.