Take a fresh look at your lifestyle.

தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக கடற்தொழிலாளர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

இராமேஸ்வரத்தினை சேர்ந்த மீனவர்கள் கச்சதீவிற்கு அருகில் எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் அவர்களை கைதுசெய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரையும் காங்கேசன் துறை கடற்படைமுகாமிற்கு கொண்டுசென்று விசாரித்த பின்னர் அவர்களை கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு கடற்பரப்பில் அண்மை நாட்களில் தமிழக மீனவர்களின் படகுகளில் கேரளா கஞ்சா இலங்கைக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் இலங்கை கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.