Take a fresh look at your lifestyle.

மொழி பெயர்ப்பாளர் ஜோர்ச் மாஸ்ரர் விடுதலை!

முன்னால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ச் மாஸ்டரை கொழும்பு முதன்மை நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது.

இலங்கை சட்டமா அதிபரின் ஆலோசனையினை தொடர்ந்து இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தயா மாஸ்ரின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ச் மாஸ்ரர் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டு வந்த இவர் வயது முதிர்ந்த நிலையில் தற்போதுதான் விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.