Take a fresh look at your lifestyle.

வவுனியாவில் தமிழர் வரலாற்று ஆலயம் விசமிகளால் தாக்கல்!

Vavuniya Tample Attack3வவுனியா ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள நீண்ட காலமாக பேணி பாதுகாத்து வழிபட்டு வந்த  வீரபத்திரர் கோயிலின் விக்கிரகங்கள் மற்றும் கட்டிடங்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வந்த வரலாற்று கோயிலான வீரபத்திரர் கோயிலுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் அண்மையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.

Vavuniya Tample Attack2இந்நிலையிலேயே வீரபத்திரர் கோயிலின் சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன் அருகிலிருந்த வேல்களும் முறித்து எறியப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.