Take a fresh look at your lifestyle.

வீட்டைத் திரும்பத் தா! மக்கள் கோரிக்கை

IMG_5725ஒரு வார காலத்திற்குள் தமக்கு பதிலை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணியை கையளிக்குமாறு கோரி, இன்று மக்கள் இராணுவத்தினரிடம் மீண்டும் வியுறுத்தியுள்ளனர்.  இன்று காலை 10 மணியளவில் தமது காணியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை குறித்த பகுதிக்கு சென்ற மக்கள் இராணுவத்தினரிடம் மனு ஒன்றினையும் கையளித்திருந்தனர். ஒரு வார காலத்திற்குள் தமக்கு பதிலை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

IMG_5717ஒருவாரம் நிறைவுற்ற நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற மக்கள் மீண்டும் அதனை வலியுறித்தினர். வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் இராணுவத்தினரிடம் காணி உரிமையாளர்கள் வினவியபோது, குறித்த விடயம் தொடர்பில் உயரதிகாரிகளிற்கும் பிரதேச செயலாளரிற்கும் அனுப்பியுள்ளதாக தெரிவத்தனர். இதன்போது காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடி வருவதாக தெரிவித்ததுடன். இதனால் தாம் தொடர்ந்தும் வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

IMG_5712

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள், தமது பரம்பரை காணியினை இராணுவம் தம்மிடம் கையளிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் 18ம் திகதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ள சிறீலங்கா அதிபர், தமது காணிகளை தம்மிடம்கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். தாம் தொடர்ந்தும் வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள், தமது காணிகளை விட்டு இராணுவம் வெளியேறி தமது காணிகளிற்குள் தாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.