Take a fresh look at your lifestyle.

கதிர்காமக்கந்தனின் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தனின் கொடியேற்ற நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது!

இலங்கையில் முருகன் வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற பாடப்பெற்ற தலங்களில் ஒன்றாக விழங்கும் காதிர்கா முருகன் ஆலய ஆடிவேல் திருவிழா தொடக்க நிகழ்வு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

Kathirkamam2கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

ஆலய திருக் கொடியேற்றல் நிகழ்வு இன்று காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து உள்ளே பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத பெரியார்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படும்.

ஓவ்வொரு நாள் இரவும் யானைகள் மற்றும் புராதன கலை கலாசார சம்பிரதாயங்களுடன் (பெரஹரா) வீதி-உலா வரவுள்ளதோடு ஜூலை 19 ஆம் திகதி இரவு ரன்தோலி மஹா பெரஹராவும் இடம் பெறவுள்ளது.

ஜூலை 20 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.

உற்சவத்தை முன்னிட்டு நாடு பூராவிலிருந்தும் ரயில், பஸ்களை விசேடசேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களமும் போக்குவரத்து சபையும் நடவடிக்கை எடுத்துள்ளன.