Take a fresh look at your lifestyle.

“கொத்தணிக் குண்டுகளின் பயன்பாட்டில் குற்றமில்லை” – பரணகம

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதில் குற்றம் இல்லை என பரணகம தெரிவிப்பு!

இலங்கையில் போரின் போது கொத்தணி குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் காணாமல் போனோர் தொடர்பான சிறீலங்கா அதிபர்  ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதில் குற்றமில்லை  கொத்தணி ஆயுத சாசனம் 2010 ஆம் ஆண்டு ஓகசுத் மாதம் 1ஆம் திகதி  முதல்தான் இலங்கையில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

கொத்தணி குண்டுகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை அடிப்படையாக வைத்து போர்குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் பரணகம இதனை தெரிவித்துள்ளார்.