Take a fresh look at your lifestyle.

துணுக்காய் பிரதேச மக்கள் சிரமங்களில்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பின்தங்கியபிரதேசமாக் காணப்படும் ஐயன்கன்குளம் கிராமத்தின்  அடிப்படைத்தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் சுமார் 361 குடும்பங்களைச் சேர்ந்த எழுநூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மேற்படி ஐயன்கன்குளம் கிராமத்தில் தற்போது 361 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் எழுநூற்றி முப்பதிற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் நிலையில் இக்கிராமத்திற்கான பிரதான வீதி முதல் கொண்டு ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்தவித புனரமைப்பு பணிகளும் இன்றிக் காணப்படுகின்றன.

அத்துடன் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இக்கிராமத்தில் வாழும் தாங்கள்  தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில்  சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்  என்றும் இதனைவிட மருத்துவ வசதி  மேலதிக கல்வி வசதி என்பவற்றைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன் போக்குவரத்து வசதிகளின்மையால் அதிகூடிய கட்டணங்களில் வாடகைக்கு வாகனங்களை பயன்படுத்தி தமது பயணத்தேவைகளைநிறைவு செய்யவேண்டியுள்ளதாகவும் குறித்த கிராம மக்கள்  தெரிவித்துள்ளனர்.

எனவே கடந்த ஆறு  ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்து வந்தபோதும் தமது கோரிக்கைகள் எதற்கும் உரிய அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை எனவும் தொடர்ந்தும் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.