Take a fresh look at your lifestyle.

பாடசாலை செல்லாத சிறார்கள் நீதிமன்றில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சாந்தபுரம் அம்பாள்நகர் ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத 3 பெண்கள் உட்பட 16 சிறார்கள் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பொலிசாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

08830170-c472-4a4b-961e-20333a1feefbகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் அம்பாள்நகர் ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத சிறார்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் நீதிமன்ற நீதவான் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைவாக பாடசாலை செல்லாத மாணவர்களை பாடசாலைக்கு மீள இணைத்துக் கொள்ளும் பொருட்டு நேற்று (05-07-2016) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையினர் கிளிநொச்சிப் பொலிசார் இணைந்து கிளிநொச்சி சாந்தபுரம் அம்பாள்நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது பாடசாலைகளுக்குச் செல்லாது காணப்பட்ட மூன்று பெண் பிள்ளைகள் உட்பட 16 பேரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நிறுத்தியதையடுத்து ஆறு சிறுவர்கள் பெற்றோர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏழு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் இணைக்குமாறு உத்தரவிட்டதுடன் இரண்டு சிறுவர்களை அச்சுவேலியிலுள்ள சான்றுபெற்ற நன்னடத்தை பாடசாலையில் வைத்துப் பராமரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை ஒரு சிறுவ தப்பிச்சென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.