Take a fresh look at your lifestyle.

மன்னார் கடற்பரப்பிலும் யாழ் கடற்பரப்பிலும் தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்கள் 6 பேர் மன்னார் கடற்பரப்பில் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

தமிழகம் பாம்பன் பகுதியினை சேர்ந்த குறித்த மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள், புத்தளம் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பித்த 17 தமிழக மீனவர்கள் கைது!

இதே வேளை, தமிழ்நாடு நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கடற்தொழில் நடவடிக்கைக்கு சென்றுள்ளார்கள் இவர்களில் இரண்டு படகு யாழ்ப்பாணம் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட வேளை இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்துள்ளார்கள்.

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளதிணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.