Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சி பழையகண்டி வீதி புனரமைப்பு

கிளிநொச்சி இராமநாதபுரம் பழையகண்டி பகுதியின் 900 மீற்றர் வீதி ஆறு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதியாகவும் இராமநாதபுரம் மகா  வித்தியாலயம் தபாலகம் பொலிஸ் காவலரண் ஆகியவற்றின் பிரதான வீதியாக காணப்படும் புதுக்காடு முதல் வட்டக்கச்சி வரைக்குமான பழைய கண்டிவீதி புனரமைக்கப்படாமல் காணப்படுவதனால் இதனூடாக பயணிக்கும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன் இவ்வீதியினை புனரமைத்து தருமாறும், இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆறு மில்லியன் ரூபா செலவில் இந்த வீதியின் ஒரு பகுதியாகக் காணப்படும் பாடசாலை தபாலகம் பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு முன்பாகவுள்ள 900 மீற்றர் வரையான பகுதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.