Take a fresh look at your lifestyle.

குடிநீர் பெறுவதில் சிரமங்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் சிவநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பெறுவதில் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஆனந்தபுரம் சிவபுரம் செம்மன்குன்று ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இப்பகுதிகளில் கடல் தடுப்பணைகள் இன்மையால் உவர் நீர் மக்கள் குடியிருப்புக்களுக்குள் வருவதனால் நிலம் உவராகியதுடன் குடிநீர் கிணறுகளில் பெரும்பாலன கிணறுகள் உவராகியுள்ளன.

இவ்வாறு குடிநீர் கிணறுகள் உவராகியமையால் குடிநீருக்க பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் இப்பகுதி மக்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆனந்தபுரம் சிவபுரம் இரணைப்பாலையின் ஒரு பகுதி செம்மண்குன்று ஆகிய பகுதிகளில் இவ்வாறு குடிநீர்த்தட்டுப்பாடு நிலவி வருகின்றது,

இப்பகுதி மக்கள் தமக்கான குடிநீர் பெறுவதற்கு மிக நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.