Take a fresh look at your lifestyle.

மருத்துவப் போராளியின் நினைவுகள்….

பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்துவ உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதிநாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ரவுயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.

ஆனாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ ஊழியர்களோஇ .த்தியர்களோ. மருந்துகளோ இருக்கவில்லை பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்டி குடிபுகுந்து வாழ்வதைப் போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது.

மருத்துவமனையின் அமைதி காணாமல் போயிருந்தது மக்களின் அலறல் ஒலிகள் காதைப் பிய்த்துக் கொண்டிருந்தன. அந்த சோகத் தணல் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத் தாக்கியது.அப்போது அனுமதிக்கும் பகுதியில் நின்ற மருத்துவப்போராளி அதிக மக்கள் காயமடைந்து கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அனுப்பிப்பினார். சத்திர சிகிச்சை அறையை விட்டு வெளியில் வருகின்றேன் தறப்பாளினால் போடப்பட்டும்இசன்னங்களால் சல்லடையாக்கப்பட்டு.கிடந்த நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் நடுத்தர வயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் தெரிய போடப்பட்டிருந்தாள்;.காயமடைந்த பலரையும் தாண்டி அம்மாவின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறு அங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலையும் தாண்டி அம்மாவின் அருகில் செல்கின்றேன்.. இறந்தவர்களின் உடலைக்கூட அகற்ற முடியாத சூழல்.வெடியோசைகள் இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன.யாரின் உயிரிற்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.

காயமடைந்திருந்த அம்மா ‘என்ர பிள்ளை பிள்ளை’என்றே முனகிக்கொண்டிருந்தாள். குருதி அதிகளவு வெளியேறி உடம்பு கண்டி சிவந்திருந்தது.கை கால் குளிர்ந்து நடுங்கியது.மார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும் உட்பாவாடையும் அணிந்திருந்தாள்.கைகளில் மட்டும் ஒரு சிறிய படம் வைத்து இறுகப்பற்றியிருந்தாள்.அதை என்னிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள். முடியவில்லை. உடல் பலம் இழந்திருந்தது. ஏவ்வளவோ கத்த முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவில்லை.

நான் அந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானேன் மாமரக்கொப்பொன்றில் சேலைன் போத்தலைக் தொங்க விட்டுமூன்று சேலைன்களை வென்புளோன் ஊசியுடாக வேகமாக ஏற்றி கொண்டிருக்க.மெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர் பெறத் தொடங்கினாள்.. முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தென்பு வர ‘தங்கச்சி எனக்கு பக்கத்தில் முத்த பிள்ளையின் உடல் சிதறிட்டு என்ர மூன்று வயது பிள்ளையைக்காணவில்லை நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்’ என அம்மா பல முறை கூறினாள். ஆனாலும் அவளிற்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இருக்கவில்லை . எல்லோருமே அந்த நிலைமைதான். என்னாலும் நின்று கதைக்க முடியவில்லை உயிருக்கு போராடும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. எல்லா இடங்களிலும் இதே ஓலம் தான்.

அம்மாவை சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்ல முனைந்த போது அம்மா வரமறுத்தாள். ஏன்ர பிள்ளை வந்தால் தான் நான் வருவேன் என்று அம்மா கெஞ்சினாள்.

அப்போது சூரியன் உச்சத்தை தொட்டிருக்கவேண்டும் வெட்பம் எம்மை அனுகவேயில்லை பல நூறு மக்களின் கண்ணீராலும்இசெங்குருதியாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது.

படார் என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகை மண்டலமாகியது கண்களை மூடிக்கொண்டு விழுந்து படுக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை . இந்த சத்ததுடன் எம்முடன் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்த மருத்துவப்போராளி செவ்வானம் அக்காவின் உயிர் அடங்கியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை. தொடையில் காயமடைந்து கொண்டுவரப்பட்ட ஒரு வரின் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தி கொண்டிருக்கையில் சரிந்துவிழுந்த செவ்வானம் அக்காவைப்பார்த்து “ஐயோடொக்டரைகாப்பாற்றுங்கோ என்று அவர் அலறிக்கொண்டு இருந்தார்.

நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மனம் சின்னாபின்னமாகியிருந்தது. வேதனை கோபம் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீரை துடைத்துகொண்டு மீண்டும் எம் கடமைக்குத்தயாரானோம்

அம்மாவின் சேலைன் போத்தலில் இருந்த சேலைனும் நிலத்தில் ஊற்றியது. நிமிர்ந்து பார்த்தபோது தான் தெரிந்தது சேலைன் போத்தலும் காயப்பட்டிருந்தது.

நள்ளிரவைத்தாண்டியும் சிறிய சத்திர சிகிச்சைக்கூடம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.இரவைப் பகலாக்கி உறக்கத்தை தொலைத்து உணவுகூட இன்றி அங்கு நின்ற மருத்துவ ஊழியர்கள் மனித நேயத்துடன் தங்களால் இயன்ற வரை உழைத்ததை யாராலும் மறுக்க முடியாது .

ஒரு சிறிது நேர அமைதியின் பின் மீண்டும் மருத்துவமனையில் ஆரவாரம் மரண ஓலங்கள் தொடர்ந்தன.;அய்யா அய்யா அது என்ன அநியாயம் ஓர் பெண் விகாரமாய் தலையிலே கைகளை வைத்தபடி அழுதாள். அவள் அருகில் சிறு காயத்துடன் மருத்துவமனை வந்த சிறுவன் அசைவற்று கிடந்தான். . இன்னொருவர் இறந்து போன தன் பச்சிளம் பாலகனை மடியில் வைத்து கதறினார். இன்னும் சிலர் சடலங்களிற்கும் காயப்பட்டவர்களிற்கும் இடையில் தமது உறவுகளை தேடினார்கள்.

.அம்மாவிற்கு குடலில் ஈரலில் சிறுநீரகத்தில் பாரிய காயங்கள் இருந்தமையால் சத்திர சிகிச்சையின் பின் அவசர சிகிச்சை விடுதிக்கு அனுப்பப்பட்டாள். அம்மா கண்விழித்தபின்பும் பிள்ளையை தேடப்போவதாக விடச்சொல்லி கெஞ்சிக்கொண்டேயிருந்தா.
பிள்ளையின் பெயச்சொல்லுங்கள் மனிதநேய உதவி செய்யும் குழுக்களிடம் கொடுக்கிறேன். அவர்கள் தேடித்தருவார்கள் என்று கூறிக்கொண்டபோதே அடிமனதில் வலித்தது.

அம்மா சொன்னா ‘நான் காயத்தோடையும் பிள்ளையைத்தேடித்திரிஞ்சன். மயங்கினாப்பிறகுதான்ஆரோ இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கினம்” எ ‘சரி அம்மா நீங்க உயிரோட இருந்தா தானே பிள்ளையை தேடலாம் என்றேனா மனதை கல்லாக்கிகொண்டு .

இரவோடு இரவாக வந்த செய்தியால் கும் இருட்டிலும் மனம் வெளித்தது கொடூரமான அந்த வேளையிருலும் எங்களிற்கு அந்தச் செய்தி தேனாய் இனித்தது “ஜ.சி.ஆர்.சி. யின் கப்பல் வருகுதாம்” ‘ ஒவ்வொரு காயக்காரர்களின் முகமும் நினைவில் வந்தது,